சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனராக இந்தியர் நியமனம்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசிபிக் துறையின் இயக்குனராக கிருஷ்ணா சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.  சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனராக இருந்த சான்கியாங் ரீ, கடந்த மாதம் ஓய்வுபெற்ற நிலையில், அந்த அப்பதவிக்கு தற்போது துணை இயக்குனராக உள்ள கிருஷ்ணா சீனிவாசன், இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச... Read more »

மனுவை தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம் – அகதிகளை நாடு கடத்த தயாராகும் பிரித்தானியா.

பிரித்தானியாவில் இருந்து அகதிகள் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்கு வந்து புகலிடம் கோரியவர்களை அடுத்த வாரம் ருவாண்டாவுக்கு நாடு கடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அதனை தடுப்பதற்கான தடை உத்தரவை கோரிலண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் மனு... Read more »

திங்கட் கிழமை அரச விடுமுறை தினமாக அறிவிப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை 13ஆம் திகதி விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர்  அறிக்கை ஒன்றின் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எனினும், அத்தியாவசிய அரச சேவைகளில் ஈடுபடுவோருக்கு இந்த விடுமுறை பாதிப்பை ஏற்படுத்தாது என கூறப்பட்டுள்ளது.   Read more »

தமிழரை புறந்தள்ளியமையால் படுகுழியில் வீழ்ந்துள்ளது நாடு! சம்பிக்க எச்சரிக்கை.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள், தமிழ் மக்களைப் புறந்தள்ளி ஆட்சி நடத்தியமையால்தான் நாடு இன்று முன்னேறாமல் படுகுழியில் வீழ்ந்துள்ளது. இதை தற்போதைய அரசு கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டும்.” என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே... Read more »

யாழில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி இருவர் படுகாயம்.

யாழ்.பொன்னாலை பகுதியில் அடையாளம் தெரியாத நபரொருவரின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் பொன்னாலையை சேர்ந்த கி.பூபாலரத்தினம் வயது-57, பகிரதன் வயது 41 ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு... Read more »

தமிழர்களை அழிப்பதில் கவனம் செலுத்திய 74 வருட ஆட்சியாளர்கள்! கஜேந்திரன் MP

74 வருட காலமாக இந்த நாட்டை ஆண்டவர்கள் தங்களது சொந்த பொருளாதாரத்தினை பெருக்குவதிலும், தமிழர்களை அழிப்பதிலுமே கவனம் செலுத்தினார்களே, தவிர தமது நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்கான எந்த திட்டத்தினையும் செய்யவில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.... Read more »

குருந்தூர் மலையில் இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்போடு அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரை…..!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைபற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்போடு அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரையில் கபோக் கல்லினால் செதுக்கப்பட்ட புத்தர் சிலையொன்றை பிரதிஸ்டை செய்யும் வைபவம் நாளை  ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. பிரதேச தமிழ் மக்களால்... Read more »

அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம்.

அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, சிவப்பு மற்றும் வெள்ளை நாட்டரிசியின் உச்சபட்ச சில்லறை விலை 210 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த விலைகளை விட அதிக... Read more »

இலங்கையில் முழுமையான மனிதாபிமான அவசரநிலை ஏற்படும் அபாயம் – ஐ.நா எச்சரிக்கை,

சுதந்திரம் பெற்றதன் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் சமகாலத்தில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், முழுமையான மனிதாபிமான நெருக்கடிக்குள் தள்ளப்படும் அபாயத்தில் இலங்கை உள்ளதாக ஐ.நா மனிதாபிமான அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது. எரிபொருள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாடு, பணவீக்கம் மற்றும் அதன்... Read more »

எரிபொருள் இருப்பை சரிபார்க்க புதிய இணையதளம் அறிமுகம்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து ICTA ஆனது நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் இருப்பை சரிபார்க்க இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, தினசரி காலை 9.00 மணிக்கு எரிபொருள் இருப்பு மற்றும் பிற தொடர்புடைய தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றப்படும், அதன் பிறகு ஒவ்வொரு அரை... Read more »