மட்டக்களப்பில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பதுக்கல் தொடர்பான புலனாய்வு நடவடிக்கையின் போது மட்டக்களப்பில் அரிசியினை பதுக்கி வைத்திருந்த வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஆர்.அன்வர் சதாத் தெரிவித்துள்ளார்.... Read more »
இராணுவத்தின் பூரண ஏற்பாட்டில் முல்லைத்தீவு, குமுளமுனை குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைக்கு மாறாக அமைக்கப்பட்டு வரும் குருந்தாவசோக விகாரையில் கபோக் கல்லினால் செதுக்கப்பட்ட புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வும் விசேட பூசை வழிபாடுகளும் இன்று (12)காலை ஒன்பது மணிக்கு நூறுக்கணக்கான பௌத்த பிக்குகளின்... Read more »
மீன்பிடித்துறைமுகங்களுக்குத் தேவையானஎரிபொருளை தனியாக இறக்குமதி செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போதைக்கு 22 மீன்பிடித்துறைமுகங்கள்... Read more »
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவை நோக்கி படகில் செல்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், கடந்த 9ம் திகதி அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவிலிருந்து 45 தஞ்சக்கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கையிலிருந்து படகு வழியாக... Read more »
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா புதிய கட்சியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதில் முன்னாள் இராணுவ அதிகாரிகளும் ஈடுபட உள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய... Read more »
யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினரால் இன்றைய தினம் யாழ்ப்பாணம், திருநெல்வேலி பிரதேசத்தில் 30இற்கு மேற்பட்ட வியாபார நிறுவனங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் அரிசியை கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த... Read more »
அரசினால் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 10 கிலோ எடையுடைய நாட்டரிசி 3700 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரின் கீழ் செயற்படும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் குறித்த... Read more »
எரிபொருள் இருப்புடன் கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை எளிதாகக் கண்டறியும் வகையில் இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.சிபெட்கோ மற்றும் ICTA இணைந்து இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளன.எரிபொருளுக்காக வரிசையில் நிற்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக Fuel.gov.lk என்ற இந்த புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதனூடாக அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின்... Read more »
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசிபிக் துறையின் இயக்குனராக கிருஷ்ணா சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனராக இருந்த சான்கியாங் ரீ, கடந்த மாதம் ஓய்வுபெற்ற நிலையில், அந்த அப்பதவிக்கு தற்போது துணை இயக்குனராக உள்ள கிருஷ்ணா சீனிவாசன், இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச... Read more »
பிரித்தானியாவில் இருந்து அகதிகள் நாடு கடத்தப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்கு வந்து புகலிடம் கோரியவர்களை அடுத்த வாரம் ருவாண்டாவுக்கு நாடு கடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அதனை தடுப்பதற்கான தடை உத்தரவை கோரிலண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் மனு... Read more »