திருக்கோவில் பிரதேசத்தில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பு.

அம்பாறை மாவட்டம்  திருக்கோவில் பிரதேச பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணை மற்றும் டீசலைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். திருக்கோவில் பிரதேச விவசாயிகள் மற்றும் மீன்பிடி தொழிலாளர்கள் ஆகியோர் மண்ணெண்ணையைப் பெற்றுக் கொள்ளும் வகையில் நீண்ட... Read more »

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வன்முறை தீவிரவாதத்தை தடுப்பது குறித்து கலந்துரையாடல்.

அம்கோர் நிறுவனத்தின் அனுசரணையில் வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்றது. கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் முதலாமாண்டு மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட 200 மாணவர்கள் இந்த திட்டத்தில் பயனடையவுள்ளதுடன் ஏதிர்கால பற்றிய சிந்தனையுடன் தலைமைத்துவம் மற்றும் ஆளுமை மிக்க... Read more »

தேசிய மாணவர் படையணியின் தலைமைத்துவ பயிற்சி முகாம்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான தேசிய மாணவர் படையணியின் தலைமைத்துவ பயிற்சி முகாம் நேற்று ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது மட்டக்களப்பு கல்லடி இராணுவ முகாமில் 38வது தேசிய மாணவர் படையணி இயங்கி வரும் அதேவேளை,... Read more »

மட்டக்களப்பு கறுப்பங்கேணி பொதுச்சந்தை திறந்துவைப்பு.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கறுப்பங்கேணியில் மட்டக்களப்பு மாநகரசபையினால் அமைக்கப்பட்ட பொதுச்சந்தை நேற்று திறந்துவைக்கப்பட்டது. அண்மையில் காலமான மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் வே.தவராஜாவின் முன்மொழிவுக்கு அமைவாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புறநகர்ப்பகுதி மக்களின் நன்மை கருதி இந்த பொதுச்சந்தை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாநகரசபைக்குள் ஏற்பட்ட நிர்வாக... Read more »

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் பலரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர்!

முல்லைத்தீவு மாவட்டத்தில், பாடசாலை மாணவிகள் பலர், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், ஆசிரியர் ஒருவரும் மாணவர் ஒருவரும், எதிர்வரும் 30 ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், ஐந்து மாணவர்களுக்கு, நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் பலரை தேடி, பொலிசார் மேலதிக... Read more »

அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் ஊழியர்களிடம் நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படுங்கள்! யாழ்மாநகர பிரதி முதல்வர்.

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் அரசு ஊழியர்களிடம் நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படவேண்டும் என யாழ் மாநகர சபை பிரதி முதல்வர் துரைராஜா ஈசன் அவசர கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்... Read more »

படகு வழியாக ஆஸ்திரேலியா சென்ற முயன்ற 35 பேர் கைது.

படகு வழியாக ஆஸ்திரேலியா சென்ற முயன்ற 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை பகுதியை அண்மித்த கடற்பரப்பில் கடற்படையினரால் நேற்றைய தினம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது. குறித்த பகுதியில் நடத்தப்பட்ட விசேட சுற்றி வளைப்பின்போது, சந்தேகத்திற்கு... Read more »

யாழிற்கு பெருமை சேர்த்த யாழ் இந்துக் கல்லூரி மாணவன்!

மாலைதீவில் நடைபெற்ற மேற்கு ஆசிய வலய 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சதுரங்கப் போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை சேர்ந்த தரம் 7 மாணவன் பிரகலதானன் ஜனுக்சன்  வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார். 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சதுரங்கப்போட்டிகள் ஆசிய சதுரங்க சம்மேளனத்தினால்... Read more »

600 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்தவர் கைது! மானிப்பாயில் சம்பவம்.

600 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தனர். மானிப்பாய் சோதிவேம்படி பாடசாலைக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் நேற்றிரவு இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது. 53 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டார். சந்தேக நபருக்கு... Read more »

கோப்பாய் , யாழ்ப்பாணம் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அரச சேவைக்கு….! மாவட்ட செயலர்.

கோப்பாய் , யாழ்ப்பாணம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்கள் காத்திருக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக யாழ் மாவட்ட அரசாங்க அதிபரினால் பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் நீர்வேலி பலநோக்கு கூட்டுறவு... Read more »