இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் ஐ.நா விசேட நிபுணர் அட்டியா வாரிஸ் கவலை!

இலங்கை எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலை, நாட்டு மக்களின், மனித உரிமை விடயங்கள் மீதும், பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளதாக, வெளிநாட்டு கடன் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான, ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிபுணர் அட்டியா வாரிஸ் தெரிவித்துள்ளார். மீண்டும் மீண்டும், நாடுகளின் மீது கடன்... Read more »

இந்தியாவின் பெயரை பாவித்து டளசுக்கு வாக்களிக்க தீர்மானித்தமை கண்டனத்துக்குரியது!மாவை சீற்றம்.

இந்தியாவின் பெயரை பாவித்துதான் டளசுக்கு வாக்களிக்க வேண்டும் என தீர்மானித்திருந்தால் அது தவறானது கண்டிக்கத்தக்கது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனா ராஜா தெரிவித்தார். அவரது இல்லத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். எழுபது... Read more »

தமிழர் தாயகத்திலும் காலி முகத்திடல் வேண்டும் சி.அ.யோதிலிங்கம்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இரகசியத் தேர்தல் மூலம் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 134 வாக்குகளும், டளஸ் அழகப்பெருமாவிற்கு 82 வாக்குகளும் அனுரகுமார திசாநாயக்காவிற்கு 3 வாக்குகளும் கிடைத்துள்ளன. ரணில்விக்கிரமசிங்க எஞ்சிய காலத்திற்கு ஜனாதிபதியாக பதவி வகிப்பார். இந்தத் தேர்தலில் பலர் விலைபோயுள்ளதாக... Read more »

எரிபொருளை தொடர்ந்து விநியோகிக்குமாறு தெரிவித்து A9 வீதியை மறித்து போராட்டம்.

எரிபொருளை தொடர்ந்து விநியோகிக்குமாறு தெரிவித்து A9 வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது கிளிநொச்சி நகரில் உள்ள எரிபொருள் விநியோகத்தை 7 மணியுடன் நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில் எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்ட நிலையில் மக்கள் வீதியை மறித்து போராட்டம் மேற்கொண்டனர். தீர்வின்றி தொடர்கிறது. Read more »

இறுதி இலக்கத்தின் அடிப்படையில் வடமராட்சியில் எரிபொருள் விநியோகம்……!

நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று இறுதி இலக்கங்களின் அடிப்படையில் பெற்றோல் விநியோகம் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இறுதி இலக்கங்களான 3,4,5 ஆகிய இலக்கங்களுக்கே இவ்வாறு பெற்றோல் விநியோகம் இடம் பெற்று வருகிறது. கரவெட்டி பிரதேச செயலரது பொறுப்பில் நெல்லியடி போலீசார் மற்றும் இராணுவத்தின் ஒழுங்குபடுத்தலில்... Read more »

தேசிய தொலைக்காட்சிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தவர்களை கைது செய்யுமாறு உத்தரவு

தேசிய தொலைக்காட்சிக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போராட்டக்காரர்கள் இருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் பணிப்புரை விடுத்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிடைக்கப்பெற்ற அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, தொலைக்காட்சி வளாகத்திற்குள் வலுக்கட்டாயமாக... Read more »

வவுனியாவில் பெருந்தொகை பணத்துடன் குடும்பஸ்தர் கைது.

வவுனியாவில் 4 இலட்சம் ரூபாய் பணத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, சிதம்பரம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த பணம் 4 இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது. இது... Read more »

ஜனாதிபதி தெரிவில் மக்களின் கருத்து புறக்கணிப்பு! ஓமல்பே ​சோபித தேரர்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட எட்டாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்யப்பட்ட விடயத்தில் பொதுமக்களின் கருத்து புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஓமல்பே சோபித தேரர் விமர்சித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் கருத்துக்கள் குறித்து கொஞ்சமும் கவனத்திற்கொள்ளவில்லை.... Read more »

மக்கள் கருத்திற்கும் நாடாளுமன்ற வாக்கு வீதத்திற்கு இடையே பாரிய இடைவெளி – புபுது ஜயகொட.

நாடாளுமன்றத்தில் வாக்கு சதவீதத்திற்கும் வெளியில் உள்ள மக்களின் கருத்துக்கும் இடையில் பல ஒளி வருட இடைவெளி இருப்பதாக சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டின் மக்கள் சக்தி... Read more »

மக்களின் கோரிக்கைகளை நசுக்காதீர்கள்! புதிய ஜனாதிபதியிடம் ஹிருணிகா விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை

புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி இந்த நாட்டு மக்களின் ஆணையைப் பிரதிபலிக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவுசெய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றினையிட்டு இதனை தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,... Read more »