1983 கறுப்பு ஜூலைக் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணத்தில் நினைவேந்தலொன்று மேற்கொள்ளப்பட்டது. வடமராட்சியிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது. நினைவேந்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வடமாகாண சபை முன்னான் உறுப்பினர்களான ச.சுகிர்தன், கே.சயந்தன்,... Read more »
கொழும்பு காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது மிகவும் மோசமான வன்முறையை கட்டவிழ்த்துவிட்டே புதிய ஜனாதிபதி தனது கடமையை ஆரம்பித்துள்ளார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். உண்மையில் காலிமுகத்திடலில் போராட்டத்தில்... Read more »
காலிமுகத்திடலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. “கோல்பேஸ் போராட்டகாரர்கள் மீதான ரணில் – ராஜபக்ஷாக்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிப்போம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காலிமுகத்திடலில்... Read more »
வன்முறையை கட்டவிழ்த்துக்கொண்டு உலகநாடுகளிடம் எவ்வாறு உதவி கோருவது என்று சட்டத்தரணி உபுல்குமர பெரும தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இன்று நாடு மிகவும் மோசமான அராஜக நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. நாட்டை முன்கொண்டு... Read more »
நீதிமன்ற உத்தரவுக்கும் ஜனாதிபதி செயலக ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றியதற்கும் தொடர்பில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். https://fb.watch/erRju1yfDe/ இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடமராட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஜே.ஆர். ஜெயவர்த்தன... Read more »
யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு இன்று காலை முதல் இலங்கை போக்குவரத்து சபையின் கோண்டாவில் சாலையில் எரிபொருள் வழங்கப்படாமையினால் குழப்ப நிலை ஏற்பட்டது யாழ் மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் கோண்டோவில் டிப்போவில் டீசல் எரிபொருள்கிரமமாக ... Read more »
யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று காலை யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலில் அமைந்துள்ள தூபியில் கறுப்பு ஜீலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பொழுது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக்கம்பத்தில் மாணவர்களால் கறுப்பு கொடியேற்றப்பட்டு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.... Read more »
இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை ஊழியர்கள் நாளைய தினம்(24) பணிப்பகிஷ்கரிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளதுடன் யாழ் சாலை முடங்குவதால் அதனுடன் இணைந்த சாலைகளின் செயற்பாடுகளும் பாதிக்கப்படுமென தெரிவித்தனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய யாழ் சாலை ஊழியர்கள் கூட்டாக... Read more »
நாடு இன்று எதிர்கொள்ளும் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிக்கு வித்திட்ட கறுப்பு யூலை தமிழ் இனப்படுகொலையின் 39ஆவது நினைவு தினம் இன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட அலுவலத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ் மாநகர முதல்வருமகிய வி.மணிவண்ணன் தலைமையில்... Read more »
கறுப்பு ஜூலை தினத்தில் இன அழிப்புக்கு எதிரான தமிழ் கூட்டமைப்பு என்கிற அமைப்பு இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இனப்படுகொலைக்கு பொறுப்பு கூறும்படி செய்யவும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணவும் என்ற அடிப்படையில் இன அழிப்புக்கு எதிரான தமிழ் கூட்டமைப்பு என்ற... Read more »