இலங்கையின் கடன் பிரச்சினைக்கு தீர்வு காண ஒத்துழைப்பு வழங்கும் சீனா

இலங்கையின் கடன் பிரச்சினைக்கு தீர்வு காண பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது. இலங்கை எதிர்நோக்கி வரும் கடன் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து பூரண புரிதல் உண்டு என சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் வெளிவிவகார அமைச்சு ஊடகப் பேச்சாளர் ஸாவோ லிஜியான்... Read more »

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய ஓய்வூதிய திட்டம்

இலங்கையில் புதிய ஓய்வூதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அதன்படி கடற்தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார். விவசாய காப்புறுதி சபையின் ஊடாக இந்த ஓய்வூதிய முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை... Read more »

வடக்கில் இன்று இ.போ.ச ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு – ஸ்தம்பிக்கப்போகும் போக்குவரத்து

இலங்கை போக்குவரத்து சபை யாழ். சாலை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று செவ்வாய்க்கிழமை (29) வட பிராந்தியத்தில் உள்ள ஏழு சாலைகளையும் ஒன்றிணைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. யாழ். சாலையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள்... Read more »

பால் மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு

பால் மாவின் விலையை மேலும் அதிகரிக்க பால் மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதன்படி 975 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 450 கிராம் உள்ளூர் பால் மா பக்கெற்றின் விலையை 175 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 450 கிராம் உள்ளூர் பால்... Read more »

மண்ணெண்ணெய் ஊற்றி கொடூரமாக எரிக்கப்பட்ட 9 ஏ பெறுபேற்றை பெற்ற பாடசாலை மாணவன்!

அம்பிட்டிய பிரதேசத்தில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் ஒன்பது “ஏ” பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர் ஒருவரை  நபரொருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர் பலத்த தீக்காயங்களுக்குள்ளான நிலையில் கவலைக்கிடமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி, அம்பிட்டிய,... Read more »

அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்களை மடக்கிப் பிடித்த சிறிலங்கா கடற்படை!

எல்லை தாண்டி மீன் பிடித்த இருபத்துமூன்று இந்திய கடறடறொழிலாளர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஐந்து படகையும் அதிலிருந்த இருபத்துமூன்று இந்திய கடற்றொழிலாளர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக... Read more »

மதுபோதையில் வந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் மக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர் – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் முலவைச் சந்திப் பகுதியில் கார் ஒன்றினை இடித்துவிட்டு தாங்கள் காவல்துறை உத்தியோகத்தர்கள் எனக் கூறி இருவர் தப்பிச்செல்ல முயன்றுள்ளனர். அவ்வேளை அவ்வூர் மக்களினால் அவர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டு தற்பொழுது யாழ்ப்பாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். குறித்த பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த... Read more »

மாவீரர்களுக்கு வல்வெட்டித்துறை கடலில் அஞ்சலி…..!

மாவீர்நாளான நேற்று இரவு வல்வெட்டித்துறை ரேவடி கடலில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் முதல் கடல் தற் கொடையாளி மேஜர் காந்தரூபன் அவர்களது தந்தையார் முருகுப்பிள்ளை யோகராசா சுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்... Read more »

க.பொ.த சாதாரண பரீட்சையில் யாழ் வலயம் சாதனை!

2021 ஆம் ஆண்டுக்கு க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியாகின. இதன் அடிப்படையில் 193 மாணவர்கள் 9A சித்திகளை பெற்று யாழ் கல்வி வலயம், வடக்கு மாகாணத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது. தீவக கல்வி வலயம் 1 , கிளிநொச்சி கல்வி வலயம் 49,... Read more »

தொடருந்து மோதியதில் குடும்ப பெண்ணொருவர் பலி!

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தொடருந்து மோதியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை – பூம்புகார் பகுதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தாயான மேரி சாந்தி (47வயது) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் சடலம், தற்பொழுது திருகோணமலை பொதுவைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான... Read more »