வவுனியாவில் மோட்டார் சைக்கிள், மாட்டுடன் மோதி விபத்து: பெண் ஒருவர் பலி!

 வவுனியா, பம்பைமடுவில் மோட்டார் சைக்கிள் மாட்டுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமிற்கருகில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வவுனியா, குருக்கள் புதுக்குளத்தில் இருந்து வவுனியா நகர் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் மாட்டுடன் மோதுண்டு... Read more »

தேசியமட்ட பெண்கள் உதைபந்தாட்ட போட்டியில் 17 வயதுப் பிரிவில் தெல்லிப்பழை மஹாஜனா சாம்பியன்!

கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் மகாஜனக் கல்லூரியின் 17 வயதுப் பிரிவு அணி சாம்பியனாகியுள்ளது. இப்போட்டி நேற்று 09.10.2023 திங்கள் காலை 9.30 மணிக்கு யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் குருநாகல் கவுசிகம மத்திய கல்லூரியை... Read more »

இலங்கை பிரதமரின் கருத்திற்க்கு சிறிதரன் பதிலடி…!

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடி தொழிலில் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படுவர் என்ற பிரதமரின் கருத்துக்கு சிறிதரன் பதிலளித்துள்ளார். பதில் வழங்கும் வகையில் இன்றைய தினம் 09.10.2023 நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கருத்து தெரிவிக்கையில், யுத்தத்துக்கு முன்னும் பின்னரும் இந்தியாவின் ரோலர் படகுகள்... Read more »

பருத்தித்துறையில் மணல் கடத்தலுக்கு துணை போகும் அதிகாரி தொடர்பில் விசாரணை! –

பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி தொடர்பிலான விசாரணை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் முன்னெடுக்கப்படுவதாக யாழ் பிரதி மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் மஞ்சுள செனரத்தெரிவித்தார், அண்மையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கடற்தொழில் அமைச்சர் தலைமையில் இடம் பெற்ற சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பிலான கூட்டத்தின்... Read more »

தேசிய மட்ட உதைபந்தாட்டப் போட்டியில் 20 வயது பிரிவில் தெல்லிப்பழை மஹாஜனா இரண்டாம் இடம்

  கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் பொலநறுவை பென்டிவெவா மத்திய கல்லூரி 20 வயதின் கீழ் பெண்கள் அணியினர் முதலாம் இடத்தை பெற்றுள்ளனர். இப்போட்டி இன்று திங்கள் காலை யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.... Read more »

பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திலுள்ள பழுதடைந்த பயணிகள் மேம்பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

கொழும்பு, பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திலிருக்கும் பழுதடைந்த பயணிகள் மேம்பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் அமைக்கும் பணியை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னவுக்கு ஜனாதிபதியின் செயலார் சமன்... Read more »

எதிர்வரும் 20 ம் திகதி வடக்கு கிழக்கில் கடையடைப்புக்கு அழைப்பு!

முல்லைத்தீவு நீதிபதிக்கு அநீதி இழைக்கப்பட்டமைக்கு எதிராக எதிர்வரும் 20 ம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் கர்த்தாலினை முன்னெடுப்பதாக அனைத்து தமிழ் கட்சிகளின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. Read more »

நல்லூர் அரசடி பகுதியில் வாள்வெட்டு!

 யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் அரசடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு வெள்ளை நிற காரில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.... Read more »

யாழில் நாளை மறுதினம் போராட்டத்தில் குதிக்கும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள்!

நாளை மறுதினம் யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர் நாளை மறுதினம் புதன்கிழமை காலை பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகும் பேரணி யாழ் நகரில் உள்ள... Read more »

பருத்தித்துறையில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் மீது துப்பாக்கிச்சூடு!

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய சென்றபோதுகுறித்த சந்தேகநபர் பொலிசாரை தாக்கி தப்பிச் செல்ல முற்பட்ட வேளை பொலிசார் குறித்த சந்தேகநபர் மீது காலுக்கு கீழாக துப்பாக்கி சூடு நடாத்தியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more »