போலி கடவுச்சீட்டு மூலம் கனடா செல்ல முயன்றவர் கைது

போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவரென... Read more »

காலநிலை மாற்றம் தொடர்பான அறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழை... Read more »

தொடரும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள அடையாள பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது. தபால் திணைக்களத்திற்கு சொந்தமான கட்டிடங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். 27,000... Read more »

பொலிஸ்மா அதிபர் – மக்கள் சந்திப்பு தினம் மீண்டும் ஆரம்பம்!

கொவிட்- 19 வைரஸ் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த காவல்துறைமா அதிபரின் மக்கள் சந்திப்பு தினம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 9 மணி முதல் காவல்துறைமா... Read more »

நாட்டில் டெங்கு நோயாளர்கள் குறித்து வெளியான அறிக்கை!

இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,000 ஐ தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் அண்மைய புள்ளிவிபரங்கள் இதனை வெளிப்படுத்தியுள்ளன. இலங்கையில் நேற்று வரை, 80,192 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.... Read more »

இலங்கை மக்களுக்கு தொடரும் அதிர்ச்சி : 97 வகையான பொருட்களுக்கு வற் வரி

இதுவரை வற் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டிருந்த138 வகையான பொருட்களில் 97 வகையான பொருட்களுக்கு அதனை விதிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன சமர்ப்பித்த பிரேரணை மீதான விவாதத்திற்கு நேற்று(09) சபை ஒத்திவைப்பு வேளையில்... Read more »

மல்வத்து பீட மகாநாயக்க தேரர், “பிரபாகரனை” சந்திக்கவிரும்பியதாக சு,சுரேந்திரன் தெரிவித்தார்!

யுத்த காலத்தில் மல்வத்துமகாநாயக்க தேரர் ஆறு தடவைக்கு மேலாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திக்க முயன்றதாகவும் ஆனால் அந்த விடயம் கைகூடவில்லை என தம்மிடம் தெரிவித்ததாக உலக தமிழர் பேரவையின் தலைவர் சுரேந்திரன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார் நல்லூர் ஆலயத்தினை வழிபட்ட பின்... Read more »

இமயமலைப் பிரகடனம் ” ஜனாதிபதியிடம் கையளிப்பு….!

சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்கள் நேற்று (07) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தனர்.அச்சமோ சந்தேகமோ இன்றி, அனைவரும் பெருமையுடனும், நம்பிக்கையுடனும், சம உரிமையுடனும் அமைதியாக வாழக்கூடிய இலங்கையைப் பற்றிய “இமயமலைப் பிரகடனம்” ஜனாதிபதியிடம்... Read more »

திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் ஹெரோயினுடன் கைது – திருட்டு பொருட்களும் மீட்பு!

கிளிநொச்சி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த 2023.11.29 அன்று திருட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. 47 பவுண் தங்க நகை இவ்வாறு களவாடப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது  தொடர்பாக கிளிநொச்சி விஷேட பிரிவின் உத்தியோகத்தர் S.A... Read more »

ஆயிரக்கணக்கான கடற்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

இலங்கை கடற்படை அதிகாரிகளை அடுத்த தரத்திற்கு பதவி உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையின் 73ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 1877 இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பரிந்துரையின்... Read more »