திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் ஹெரோயினுடன் கைது – திருட்டு பொருட்களும் மீட்பு!

கிளிநொச்சி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த 2023.11.29 அன்று திருட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
47 பவுண் தங்க நகை இவ்வாறு களவாடப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது  தொடர்பாக கிளிநொச்சி விஷேட பிரிவின் உத்தியோகத்தர் S.A விவேகானந்தருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கிளிநொச்சி பொலிஸ் நிலையப்பிரிவின் குற்றவிசாரணை பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கருணரத்தினம் ஜசிந்தன் தலைமையிலான குழுவினர் மற்றும் விஷேட பிரிவின் நிலையப்பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமைவாக இல 339, அம்பாள்குளம், கிளிநொச்சி விலாசத்தில் வசித்து வரும் கணவன் மற்றும் மனைவி இருவரும் நேற்றையதினம் கைது செய்யப்பட்டனர்.
 அவர்களிடமிருந்து தங்க ஆபரணங்கள், ஒரு IPhone, 198 000 ரூபா பணம் மற்றும் ஹெரோயின் 430mg , Mahendra வாகனம் என்பனவும் கைப்பற்றப்பட்டது.
உதயநகர் பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டு, 2023.12.08 திகதி நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்பன பாரப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களை 2023.12.08 திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில்  கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் பாரப்படுத்தப்பட்டவேளை, பிரதான சந்தேகநபரை 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்ததுடன் ஏனைய இருவருக்கும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான ஆள் பிணை வழங்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews