யாழில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநகர் பகுதியில் ஐஸ் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள தடாகத்தில்  ஆணொருவரின் சடலம் இன்று(10)  காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலத்தை அவதானித்த பிரதேசவாசிகள் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர். அதேவேளை குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. Read more »

தொடரும் யுக்திய வேட்டை-பலர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸாரின் ‘யுக்திய’ நடவடிக்கைகளில் 663 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 547 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 116 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 663... Read more »

நிரம்பி வழியும் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலை

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் கைதிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் கைதிகளுக்கு 185 படுக்கைகள் உள்ளதாகவும், ஆனால் தற்போது 344 கைதிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாகவும் சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த... Read more »

யாழ்ப்பாணத்தில் பெரும் குழப்பத்துடன் நடைபெற்ற ஹரிஹரனின் இசை

யாழ்ப்பாணத்தில் பெரும் குழப்பத்துடன் நடைபெற்ற ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியின் போது ஆறு பேர் கைது செய்யப்பட்டதுடன் மூன்று பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் ஒழுங்கீனம், பொலிஸாரின் பற்றாக்குறை காரணமாகவும் கட்டுக்கடங்காத பார்வையாளர்கள் மேடைக்கு அருகில் கூடியதாலும் நேற்று... Read more »

விமானப்படையின் 73 வது ஆண்டு நிறைவு உதைபந்தாட்ட சங்கங்களிற்கிடையிலான உதைபந்தாட்பட்ட சுற்றுப்போட்டிகள் இன்று ஆரம்பம்

இலங்கை விமானப்படையின் 73 வது ஆண்டு நிறை முன்னிட்டு வடமாகாணத்தில் உள்ள உதைபந்தாட்ட சங்கங்களிற்கிடையிலான உதைபந்தாட்பட்ட சுற்றுப்போட்டி இன்று வைபவ ரீதியாக ஆரம்பமானது. இலங்கை விமானப்படையின் 73 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கை விமாப்படைத் தளபதி எயா மார்சல் உதயநி ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைவாக... Read more »

குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளருக்கு பிடியாணை!

குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகன் அவர்களுக்கு யாழ்ப்பாண நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த வருடம் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார். இதன்போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து... Read more »

ஹரிஹரனின் இசை நிகழ்வில் தடைகளை உடைத்து கொண்டு பாய்ந்து சென்ற இரசிகர்கள்

ஹரிஹரனின் இசை நிகழ்வு நேற்றையதினம் யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான இரசிகர்கள் கலந்துகொண்டனர். ஆரம்பத்தில் இலவசம் என அறிவிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது பின்னர் கட்டணம் அறவிடப்பட்டும் (ரிக்கெட்) இலவசமாகவும் நடைபெற்றது. இந்நிலையில் இலவசமாக பார்வையிட்ட இரசிகர்கள் தடைகளை உடைத்துக்கொண்டு பாய்ந்து சென்றதால் பொலிஸார்... Read more »

இன்றைய இராசி பலன் 10.02.2024

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌. 🌈 தை: 27. 🇮🇳꧂_* *_🌼 சனிக்கிழமை_ 🦜* *_📆 10- 02- 2024🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_* நீண்ட நாள்... Read more »

பாடசாலை வரலாற்றில் முதல் முதலாக இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட காணியில் நெல் அறுவடை விழா

பாடசாலை வரலாற்றில் முதல் முதலாக இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட காணியில் நெல் அறுவடை விழா இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மத்திய கல்லூரி சமூகத்தினால் சுமார் முக்கால் ஏக்கரில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக நெல் அறுவடை விழாவானது பாடசாலை முதல்வர் சபரி பூலோகராஜா தலைமையில்... Read more »

வவுனியாவில் பாதசாரி கடவையூடாக வீதியினை கடக்க முயன்ற மாணவனை மோதித்தள்ளிய மோட்டார் சைக்கிள்

வவுனியாவில் பாதசாரி கடவையூடாக வீதியினை கடக்க முயன்ற மாணவனை மோட்டார் சைக்கில் மோதியதில் மாணவன் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளார். வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள பாதசாரிகள் கடவையில் இன்று (09.02.2024) மதியம் இடம்பெற்ற இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், துவிச்சக்கரவண்டியில் பாதசாரி கடவையூடாக... Read more »