நாட்டின் பல பகுதிகளில் நாளை கடும் வெப்பம்

நாளை நாட்டில் அதிகளவு வெப்பநிலை நிலவும் என தெரிவிக்கப்படுகின்றது. அதாவது அதி வெப்பத்துடனான வானிலை நாளைய தினம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, வடமேல், தெற்கு, மாகாணங்களிலும், இரத்தினபுரி, அநுராதபுரம், மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் சில... Read more »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி நாளை போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி நாளையதினம் முல்லைத்தீவில் கவனவீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முல்லைத்தீவில் நாளையதினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை  முன்னெடுக்கவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி ம.ஈஸ்வரி... Read more »

தேநீர் அருந்திய ஆறு ஆசிரியைகளுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

பாணந்துறை பாடசாலை ஒன்றில் தேநீர் அருந்திய ஆறு ஆசிரியைகள் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். இன்று (07) பாடசாலை இடைவேளையின் போது குறித்த பெண் ஆசிரியைகள் தேநீர் அருந்தியதாகவும், இதனால் ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.... Read more »

இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபடும் ரஷ்யர்கள் மீது கடும் நடவடிக்கை!

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வர்த்தகத்தில் ஈடுபடும் ரஷ்ய பிரஜைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும், வர்த்தக நடவடிக்கைகளுக்காக வர்த்தக விசா வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி... Read more »

சவேந்திர சில்வா உள்ளிட்ட பாதுகாப்பு உயர் மட்ட குழுவினர் யாழ்ப்பாணம் வருகை!

பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ உள்ளிட்ட பாதுகாப்பு உயர் மட்ட குழுவினர் யாழ் மாவட்டத்திற்கு இன்றையதினம் விஜயம் செய்தனர். இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம்... Read more »

நான் புலம்பெயர் அமைப்பினருக்கும் எதிரானவன் அல்ல! -அலி சப்ரி

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை வழங்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்க தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் முன்வரவேண்டும்  என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி   தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில், நான் ஒட்டுமொத்த புலம்பெயர் அமைப்பினருக்கும்... Read more »

கல்வி அமைச்சரின் கலாநிதியை தூக்கிய மாகாண கல்விப் பணிப்பாளர் குயின்ரஸ்

இலங்கை கல்வி அமைச்சரின் கலாநிதிப் பட்டத்தை நீக்கி வடமாகாண கல்விப் பணிப்பாளர் யோன் குயின்ரேஸ் கடிதம் ஒன்றை எழுதிய சம்பவம் கல்வித் திணைக்களத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இலங்கை கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிறேமஜயந்தவின் கலாநிதி பட்டத்தை நீக்கி திரு சுசில் பிறேமஜயந்த... Read more »

யாழ். நல்லூரில் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த வாகனம்..!

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி கடை கட்டித்துடன் மோதி விபத்துக்குள்ளானது. பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறி இன்று (07) காலை நல்லூர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வளைவில் திரும்பும் போது அங்கிருந்த கடை... Read more »

இரு இலங்கையர்கள் உயிரிழப்பு..!

கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள தன்சானியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு இளைஞர்களும் தன்சானியாவில் தாருஸ் சலாம் நகரிலிருந்து மஹேங்கே நகருக்கு பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களில்... Read more »

வீடற்ற அனைத்து குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்க திட்டம்

கொழும்பு கஜிமாவத்தையில் வசிக்கும் அனைத்து வீடற்ற குடும்பங்களுக்கும் வீடுகளை வழங்கத் தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அரசாங்கத்தின் வீடுகள் வழங்கும் கொள்கைகள் மற்றும் அளவுகோல்களுக்கு அமைவாகவே இந்த பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி அறிவித்துள்ளார். கொழும்பு... Read more »