அயல் வீட்டாருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் அடித்து நொருக்கப்பட்டது வீடு..!

யாழ்.சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று பிற்பகல் வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. குறித்த தாக்குதலில் வீட்டில் கதவு மற்றும் ஜன்னல்கள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளன. அயல் வீட்டாருடன் ஏற்பட்ட வாய் தகராறு மோதலாக மாறிய நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் மீது சைபர் தாக்குதல்..!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பொலிஸ் உயரதிகாரி ஒருவர் இதை உறுதிப்படுத்தியதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Read more »

அமைதிவழி போராட்டங்களுக்கு எதிராக இராணுவத்தை பயன்படுத்தும் நோக்கமே கிடையாது..! பாதுகாப்பு அமைச்சு….!

நாட்டில் நடைபெற்றுவரும் அமைதிவழி போராட்டங்களுக்கு எதிராக இராணுவ அதிகாரத்தை பயன்படுத்தும் ஆயத்தங்கள் எவையும் இல்லை. என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கூறியுள்ளார். இது குறித்து பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, போராட்டங்கள் இடம்பெறும் சந்தர்ப்பத்தில்... Read more »

இன்று தொடக்கம் 20ம் திகதிவரை மின்வெட்டு தொடரும்..!

நாடு முழுவதும் நாளை திங்கட்கிழமை தொடக்கம் 20ம் திகதி வரையிலான மின்வெட்டு அட்டவணை வெளியிடப்பட்டிருக்கின்றது. இதன்படி நாளை திங்கள் கிழமை 4 மணி நேரம் 20 நிமிடங்களும், 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் மின்வெட்டு 4 மணி நேரம் 50 நிமிடங்களாக அதிகரிக்கும். Read more »

இறந்தவர்கள்போல் வேடமிட்டு கொழும்பில் போராட்டம் ஆரம்பம்..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரி இறந்தவர்கள்போல் வேடமிட்டு அமைதி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு – புதுக்கடையிலிருந்து – காலி முகத்திடல் வரையில் இந்த அமைதிவழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. Read more »

உறக்கத்திலேயே உயிரிழந்த சிறுமி, உற்கூற்று பரிசோதனையில் 2 மாத கர்ப்பவதி என உறுதி..!

தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 18 வயதான சிறுமி ஒருவர் உறக்கத்திலேயே உயிரிழந்த நிலையில் பருத்தித்துறை வைத்தியசாலையில் சடலமாக ஒப்படைக்கப்பட்டிருக்கின்றார். இந்நிலையில் குறித்த சிறுமி 2 மாத கர்ப்பவதியாக இருந்தார். என உடற்கூற்று பரிசோதனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கரவெட்டி பகுதியை சேர்ந்த 18 வயதான குறித்த... Read more »

பதவிக்காலம் முடிவடையும் வரை நான் பதவியிலிருந்து விலகமாட்டேன்! – கோட்டாபய திட்டவட்டம் –

“மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் எனது பதவிக்காலம் முடிவடையும் வரை நான் பதவியில் இருப்பேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை நடைபெற்ற முன்னாள் அமைச்சர்களுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது “புதிய... Read more »

மிருசுவில் வடக்கு மிருசுவில் பாரதிமுன்பள்ளியின் வருடப்பிறப்பு விழாவும் மாணவர்களுக்கு உதவியும்….!

சித்திரை புத்தாண்டு விழா மிருசுவில் வடக்கு பாரதி முன்பள்ளியில் ஆசிரியர் தலைமையில் 14/04/2022 அன்று  இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் இலங்கை முதல் உதவிச்சங்கத்தின்  இந்து சமயத்  தொண்டர் சபையின் தேசிய ஆணையாளர் சிவத்திரு வை.மோகனதாஸ், அதன் தேசிய கண்காணிப்பாளர் சிவத்திரு வை.ஜெகதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக... Read more »

மனிதாபிமானத்தால் ஒன்றிணைவோம் ! எனும் தொனிப்பொருளில் புலம் பெயர் உறவுகளால் தென்னிலங்கை மக்களுக்கு உதவி…!

மனிதாபிமானத்தால் ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் புலம் பெயர் உறவுகளால் தென்னிலங்கை மக்களுக்கு இன்றைய தினம்  உதவிக்கரம் நீட்டியுள்ளது. நேற்றைய தினம் கொழும்பிலுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் அன்பும் நட்பும் கொண்ட எமது சிங்கள... Read more »

வன்முறை கும்பல் வீடு புகுந்து அடாவடி..! வாள்வெட்டுக்கு இலக்கான குடும்பஸ்த்தர்.. |

யாழ்.புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் மீதும், வீட்டிலிருந்தோர் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது. மேற்படி தாக்குதல் சம்பவத்தில் ரதீஸ்தரன் (வயது 41) என்பவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். புன்னாலைக்கட்டுவன் தெற்கில் அமைந்துள்ள குறித்த... Read more »