கட்சித் தலைவர்கள் கூட்டம் இரத்து! நாடாளுமன்றம் கூட்டப்படமாட்டாது: சபாநாயகர் அறிவிப்பு.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை நாடாளுமன்றத்தை கூட்டாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இதேவேளை, நாளைய தினம் இடம்பெறவிருந்த கட்சித் தலைவர்களின் கூட்டமும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே மீண்டும் நாடாளுமன்றம் கூட்டப்படும் எனவும் அவர்... Read more »

நீர்கொழும்பில் பதற்ற நிலை.. வன்முறை வெடிப்பு – 6 பேர் வைத்தியசாலையில்.

நீர்கொழும்பில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு தீன் சந்தியிலும் சில கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் அந்தப் பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதேச அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் கூடிய குழுவொன்று அப்பகுதியில்... Read more »

ஊரடங்கு உத்தரவு நீடிப்பு.

நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 12ம் திகதி காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக கடந்த ஒரு மாதகாலமாக அமைதியான முறையில்... Read more »

காலி முகத்திடலில் ஏற்பட்ட வன்முறை! சட்டமா அதிபரிடம் இருந்து பொலிஸ் மா அதிபருக்குச் சென்ற கடிதம்.

காலிமுகத்திடல் அமைதிப் போராட்டம் மீதான தாக்குதல் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கு அனைத்து தரப்பினருக்கும் சட்டரீதியான பொறுப்பு இருப்பதாக சட்டமா அதிபர் எழுத்து மூலம் பொலிஸ்... Read more »

மட்டு. நகர் உட்பட பல பகுதிகளில் பொலிஸார் வீதி சோதனைகளை முன்னெடுப்பு.

நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர் உட்பட பல பகுதிகளில் பொலிஸார் வீதி சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன் மாவட்டம் முற்றாக செயழிலந்த நிலையில் காணப்படுகின்றது. மட்டக்களப்பு நகர் உட்பட அனைத்து பகுதிகளிலும் வெறிசோடிய நிலையில்... Read more »

களுவாஞ்சிகுடி பெரமுன கட்சியின் பட்டிருப்பு தொகுதிக் காரியாலயத்தில் பதாகைகள் எரியூட்டல்.

நாடாளவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் அமைந்திருந்த பட்டிருப்புத் தொகுதிக் காரியாலயத்தின் பதாகைகள் அப்பகுதி மக்களால் இன்று மாலை உடைத்து எரியூட்டப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புத் தொகுதிக்குரிய ஸ்ரீ... Read more »

துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கு உத்தரவு.

பொதுச் சொத்துக்களைச் சூறையாடும் மற்றும் உயிர்ச் சேதம் ஏற்படுத்தும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு பாதுகாப்பு அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் நாடளாவிய... Read more »

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள செய்தி!

வன்முறைகள் மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்துமாறும் அமைதியாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு ஜனாதிபதி வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். தற்போது எழுந்துள்ள பொருளாதார நெருக்கடியை தீர்க்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பதிவின் ஊடாகவே அவர் இந்த செய்தியினை வௌியிட்டுள்ளார். Read more »

வெற்றிலைக்கேணியில் புதைக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம், குடும்ப தகராறே கொலைக்கு காரணம் என சந்தேகம்…..?

யாழ்ப்பாணம்  வடமராட்சி கிழக்கு  வெற்றிலைக்கேணியில் ஆண் ஒருவரது உடலம் புதைக்கப் பட்டுள்ளதாக சந்தேகத்தின் பெயரில் குறித்த  இடத்தினை மருதங்கேணி போலீசார் தமது கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டுவந்துள்ளதாகவும் நீதி மன்ற உத்தரவை பெற்று குறித்த இடத்தை தோண்டுவதற்க்கு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மருதங்கேணி போலீஸ் நிலைய தகவல்கள்... Read more »

முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது டுவிட்டர் பக்கத்தில் விசேட கோரிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இராணுவ ஆட்சிக்கு வழிவகுத்து விடவேண்டாம் என அனைத்து பிரஜைகளிடமும் கோரிக்கை விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும், இராணுவ ஆட்சிக்கு வழி வகுப்பதற்காக நாசகார சக்திகள்... Read more »