மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் தொழிற்சந்தை நிகழ்வுஇ

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான  தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் தொழிற்சந்தை நிகழ்வு நேற்று(23-12-2021) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மனித வலு  மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி நிகழ்வானது  பகல் 10 மணிக்கு மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் மேலதிக அரசாங்க அதிபர் க. சிறிமோகனன்  தலைமையில் நடைபெற்றது   நிகழ்வில்   கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்  முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட இணைப்பாளருமான வை.தவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்

 குறித்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தொழில் வழங்கும் நிலையில் காணப்படுகின்ற தனியார் நிறுவனங்களின் தொழில் நேர்முகத்தேர்வு ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருந்தன குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin