விவசாயி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி.

தரமற்ற உழவு இயந்திரத்தைப் பயன்படுத்தி விசாயத்தை மேற்கொள்ள முடியவில்லை என்று தெரிவித்து கொழும்பிலுள்ள வாகன இறக்குமதி தனியார் நிறுவனமொன்றுக்கு முன்பாக விவசாயி ஒருவர் இன்று தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

எனது நாடு அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போதே குறித்த விவசாயி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

எனினும் பொலிஸார் தலையிட்டு குறித்த விவசாயியை பாதுகப்பாக மீட்டுள்ளனனர்.

அனுராதபுரம், பொலன்னறுவை, தங்கல்ல, சூரியவௌ ஆகிய பகுதிகளிலுள்ள விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள உழவு இயந்திரம் தரமற்றது என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பகுதிகளிலிருந்து கொழும்புக்கு உழவு இயந்திரத்தில் வருகை தந்த விவசாயிகள், குறித்த நிறுவனத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு முன்பாக ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய எனது நாடு அமைப்பின் தலைவர் சஞ்ச மவாத்த, விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் உள்ளடங்களாக விவசாயிகள் பாரிய பொருளாதார பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள உழவு இயந்திரம் தரமற்றது என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அந்த உழவு இயந்திரத்தைப் பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகைள முன்னெடுக்க முடியவில்லை என்று விவசாயிகள் எனது அமைப்பின்; கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

தரமற்ற உழவு இயந்திரங்களே, இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. எனவே விவசாயிகள் பெரும்போக செய்கையை முன்னெடுக்க முடியாது பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளனர்.

Recommended For You

About the Author: admin