சீனா, மீனவர்களுக்கு உதவி வழங்கியதை விமர்சிப்பவர்கள் சினோபார்ம் ஊசியையும் பெற்றிருக்கக்கூடாது!

வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் கைது நடவடிக்கை தொடர வேண்டும் என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா மற்றும் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் ஆகியோர் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சீனா, மீனவர்களுக்கு உதவி வழங்கியதை விமர்சிப்பவர்கள் சினோபார்ம் ஊசியையும் பெற்றிருக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin