இயக்கச்சியில் சற்றுமுன் விபத்து: வீதியில் தடம் புரண்ட ஹன்ரர்!

கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் இன்று சனிக்கிழமை(18.12.2021) சற்றுமுன்னர் விபத்தொன்று பதிவாகியுள்ளது.

கன்டர் வாகனம் வாகனம் சிறிய ரக பிக்கப் வாகனத்தைக் கட்டி இழுத்துக் கொண்டு சென்ற நிலையில் இயக்கச்சி பாற்பண்ணை நோக்கித் திரும்ப முற்பட்ட போது பின்னால் வந்த குளிரூட்டப்பட்ட தனியார் பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து கன்டருடன் மோதியதில் கன்டர் வாகனம் வீதியில் தடம் புரண்டுள்ளது.சம்பவத்தில் குளிரூட்டப்பட்ட பேருந்தும், கன்டர் வாகனமும் கடும் சேதங்களுக்கு உள்ளான போதும் தெய்வாதீனமாக உயிரிழப்புக்களோ, காயங்களோ ஏற்படவில்லை எனத் தெரிய வருகின்றது.

குறித்த சம்பவத்தால் மேற்படி பகுதியில் ஏ-09 வீதியுடனான போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews