இலங்கை கடற்படையின் பாதுகாப்புடன் இராமர் பாலத்தை பார்வையிட்டுள்ள சீனத்தூதுவர்.

இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் உள்ள இராமர் பாலத்தை நேற்று கண்காணித்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக வடமாகாணத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்ட இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong மன்னார் – தாழ்வுபாடு கடற்படை முகாமை  முற்பகல் சென்றடைந்துள்ளார்.

அங்கிருந்து தமது தூதரக பிரதிநிதிகளுடன் கடற்படை படகுகளில் இராமர் பாலத்தை நோக்கி புறப்பட்டு பார்வையிட்டுள்ளார்.

இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு தலைமை அதிகாரி கேர்ணல் காஓ பின், தலைமை அரசியல் அதிகாரி லூஓ ச்சொங் உள்ளிட்டவர்களும் தூதுவருடன் இந்த பயணத்தில் இணைந்துள்ளனர்.

கடற்படை முகாமிலிருந்து புறப்பட்டு சுமார் ஒரு மணித்தியாலம் பயணித்து இராமர் பாலத்திற்கு அருகே சிறு படகொன்றின் மூலம் 17 கடல் மைல் தொலைவிலுள்ள இராமர் பாலம் மணற்திட்டை சீன தூதுவர் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுஷ்கோடி வரை 32 கிலோ மீட்டருக்குள் உள்ள 16 மணல் திட்டுக்களை கொண்ட பகுதி இராமர் பாலம் எனவும், ஶ்ரீ ராம்சேது என வணக்கத்திற்குரிய புனித பகுதியாகவும் பாரத மக்களால் போற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Gallery

Recommended For You

About the Author: admin