“சிதைந்து போகின்ற தமிழ் தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்” கருத்தாய்வு.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் “சிதைந்து போகின்ற தமிழ் தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்” என்ற தலைப்பில் கருத்தாய்வு ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்த கருத்தாய்வு எதிர்வரும் 18.12.2021 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு, யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இக் கருத்தாய்வில் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், திரு. நிலாந்தன், திரு.ந.வித்தியாதரன், திரு.ம.செல்வன், பா.உ.எம்.ஏ.சுமந்திரன், பா.உ.த.சித்தார்த்தன், மு.பா.உ.எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் திரு.க. அருந்தவபாலன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

அத்துடன் இக் கருத்தாய்வின் நெறியாளராக வி.எஸ்.சிவகரன் செயற்படுவார் என்றும் முன்னுரையை அருட்தந்தை ஜெயபாலன் அடிகளார் வழங்குவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: admin