கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக ஐரோப்பா தப்பிச் செல்ல முயன்றவர்கள் கைது.

கட்டுநாயக்க சர்வதேச விமானம் நிலையம் ஊடாக ஐரோப்பிய நாடு செல்ல வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலியான ஆவணங்கள் ஊடாக தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி பிரான்ஸ் ஊடாக ஜெர்மனி, மெக்சிக்கோவுக்கு தப்பிச்செல்ல முயன்றவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரும், கியூபாவைச் சேர்ந்த மூவருமே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வெளியேறும் பகுதியில் உள்ள குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள கியூபா பிரஜைகள் மூவரும் இலங்கைக்குவந்து, இலங்கையிலிருந்து மெக்சிகோவுக்கு சென்று குடியுரிமையை பெற்றுகொள்ள திட்டமிட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரஜை அவரது சகோதரரின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஜேர்மன் ஊடாக பிரான்ஸ்க்கு பயணிக்க முயற்சித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin