கோவிட் தொற்று பரவியமை தொடர்பில் பரபரப்பான காரணத்தை வெளியிட்டுள்ள கனடாவின் பெண் விஞ்ஞானி.

சீனாவின் வூகான் ஆய்வகத்தில் இருந்தே கோவிட் வைரஸ் பரவியிருக்கலாம் என கனடாவை சேர்ந்த பிரபல நுண்ணுயிரியல் விஞ்ஞானி அலினா சென் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளுக்கான குழுவை சேர்ந்த எம்.பி.,க்களிடையே பேசுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், இது வூகான் பகுதியில் உள்ள விலங்குகள் சந்தையில் இருந்து இயற்கையாக பரவவில்லை என்றும், அங்குள்ள ஆய்வகத்தில் உயிரி பொறியியல் மூலம் செயற்கையாக உருவாக்கப்பட்டு பரவியிருக்க வாய்ப்புள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

கோவிட் வைரஸை சீனா பரப்பியதாக பல நாடுகள் சந்தேகம் எழுப்பும் நிலையில், விஞ்ஞானி அலினா சென்னின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin