அமெரிக்காவை அடுத்தடுத்து தாக்கும் பேரனர்த்தங்கள்! இருளில் மூழ்கிய இலட்சக்கணக்கான வீடுகள்.

அமெரிக்காவில் கென்டகி மற்றும் அண்டை மாகாணங்களில் அடுத்தடுத்து சூறாவளிகள் தாக்கிய நிலையில், புழுதிப் புயல் வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் மணிக்கு 161 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புழுதிப் புயலால் வானுயர புழுதி பறந்து சென்றுள்ளது.

இதனால், நெப்ரஸ்கா, மின்னசோட்டா ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளதுடன், வர்த்தக நிறுவனங்கள் இருளில் மூழ்கியுள்ளன. புழுதிப் புயல் மட்டுமின்றி இடி, மின்னலுடன் மழை மற்றும் பனிப்பொழிவும் ஏற்படக்கூடும் என அமெரிக்க தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: kathiresu bavananthy