வடக்கு மீனவர்களுக்கு சீனா 20 மில்லியன் ரூபா வாழ்வாதார உதவி!

வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங், யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஊடாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சுமார் 13.75 மில்லியன் ரூபாய் பெறுமதியான உணவுப் பொதிகளையும் 6 மில்லியன் ரூபாய் பெறுமதியான வலைகளையும் வழங்கி வைத்துள்ளார்.

இலங்கைக்கான சீனத் தூதுவரின் அழைப்பினை ஏற்று, யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு உதவித் திட்டங்களை பயனாளர்களுக்கு வழங்கி வைத்தார்.

கொரோனா பரவல் உட்பட பல்வேறு காரணங்களினால் வாழ்வாதார அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவிகள் தேவைப்படுவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு தரப்புக்களிடமும் கோரிக்கை முன்வைத்த நிலையில், சீனாவினால் முதல் கட்டமாக குறித்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. –

Recommended For You

About the Author: Editor Elukainews