வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி புல்லாவெளி செபஸ்தியார்  தேவாலய கூரை இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் காயம், அதிகாலை சம்பவம்

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி புல்லாவெளி செபஸ்தியர் தேவாலய கூரை இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை 5:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
நேற்று மாலை 5.30 மணியளவில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கிராமத்தை சேர்ந்த இளம் குடும்பம் தமது நேற்றிக்கடன்களை நிறைவேற்றுவதற்க்காக சென்று அங்கு தங்கியிருந்து வழிபாட்டில் ஈடுபட்ட வேளையிலேயே இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் கட்டைக்காட்டை சேர்ந்த இளைஞன் வினோத் என்பவர் பலத்த படுகாயமடைந்துள்ள நிலையில் கிளிநொச்சி பொது வைத்திய சாலைக்கு கொண்டு சொல்லப்பட்டுள்ளார்.
இவ் அனர்த்தத்தில் மனைவிக்கு எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை. அவர்களது மோட்டார் சைக்கிளும் பலத்த சேதம் அடைந்துள்ளது.
ஆலய முகப்பு இடிந்து விழுந்ததிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இவ் அனர்த்தினால் அப்பிரதேச மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

Recommended For You

About the Author: admin