ஊர்காவற்றுறை கடற்கரையிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது!

யாழ்.ஊர்காவற்றுறை கடலில் குடும்பஸ்த்தர் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது.

நயினாதீவு, ஜே/34 கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் நடராசா தர்மபாலன் என்ற 58 வயதுடைய குடும்பஸ்தருடைய சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.

குறித்த நபர் கடந்த 9 திகதி அன்று வீட்டிலிருந்து வெளியேறியதாகவும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகள் ஊர்காவற்றுறை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews