பரந்தன் – சிவபுரம் பகுதியில் பொதுநோக்கு மண்டபம் திறப்பு.

கிளிநொச்சி, பரந்தன் – சிவபுரம் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொதுநோக்கு மண்டபத்தின் திறப்பு விழா நிகழ்வும், காணி உறுதிப்பத்திரம் மற்றும் நட்டஈட்டுக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வும் இன்று நடைபெற்றன.
பரந்தன் சிவபுரம் பகுதியில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இரண்டு மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொது மண்டபம் இன்று காலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கான இழப்பீட்டுத் தொகை என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.
இதேவேளை கல்விப் பொதுத் தராதர சாதரண தரத்தில் தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்ற சிவபுரத்தை சேர்ந்த மாணவர்களுக்கு, அமைச்சரால் தலா ஐயாயிரம் ரூபா நிதியும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
கண்டாவளை பிரதேச செயலாளர் ரீ.பிருந்தாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவநாதன், பரந்தன் பங்கு தந்தை மற்றும் கிராம மட்ட அமைப்புகளின், பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin