பரபரப்பிற்க்கு மத்தியில் மாநகரசபை பாதீடு இன்று..!கட்சி அரசியலா?, அல்லது இன அரசியலா ? இன்றைய பாதீடு தீர்மானிக்கும்…..!

(கா.எழிலரசி)
யாழ் மாநாகர சபை பாதீடு இன்று பலத்த எதிர் பார்ப்பிற்க்கு மத்தியில் இடம் பெறவுள்ளது.

இந்நிலையில் மாநகர சபை பாதீடு முதல் தடவை தோற்கடிக்கப்பட்டால் திருத்தங்களுடன் இரண்டாவது தடவை மீள சமர்ப்பிக்க முடியும்.,
ஆனால் இரண்டாவது தடவையும் பாதீடும் தோற்கடிக்கப்பட்டால் உள்ளூராட்சி மன்றங்களின் 2017 ம் அண்டு தேர்தல்  திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மூன்றாவது தடவையாக முதல்வரை தெரிவு செய்யமுடியாது என்றும்  மாறாக அச் சட்டத்தில் பாதீடு தோற்கடிக்கப்பட்ட பின்னர் மாநகர முதல்வர் பதவி ராஜினாமா செய்து கொள்வதாக அல்லது பதவி இழந்ததாக கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இன்றைய தினம் பாதீடு தோற்கடிக்கப்பட்டால் திருத்தங்களுடன் மீள சமர்ப்பிக்கக்கூடிய சந்தர்ப்பம் சட்ட ரீதியாக உண்டு.

மாநகர முதல்வர் இதுவரை இருந்த முதியவர்கள் விட அதிகாமான வேலைத் திட்டங்களை மேற்கொண்டுவருகின்றார் என்ற சிந்தனை  மக்கள் மற்றும் புத்திஜீவிகள், மட்டும்ல்ல மாநகர மக்களும் எண்ணுகிறார்கள்,  அதற்கு பல்வேறு உதாரணங்களும் உண்டு அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக நகரில் மழைநீர் தேஙகி வீதிகள் எல்லாம் தடைப்பட்டிருந்த வேளை சில மணி நேரங்களில் வடிகால்களை சீரமைத்து நீர் வழிந்தோடும் வகையில் சீர் செய்தமையும், ஆரியகுளம் அபிவிருத்தி, தற்போது சம நேரத்தில் இரண்டு குளங்களின் அபிரவிருத்தி உட்பட்ட விஷயங்கள் மட்டுமல்ல, நாலவல் மணடப விவகாரம், இந்தியா அரசினால் கட்டப்பட்டுள்ள கலாசார நிலையத்தை யாழ் மாநகர சபையின் கீழ் கொண்டுவருதல்,  அதற்கான முயற்சிகள் என்பன சில உதாரணங்களாகும் கூறலாம், இதைவிட அதிகமான பணிகளையும் ஆற்றியுள்ளார் முதல்வர், இவை சில உதாரணங்களே.

உண்மயில் எதிர் கட்சிகள் அல்லது எதிர் அணிகள் என்றால் ஏதிர்ப்பது என்பது  பொருள் அல்ல.ஆனால் இன்று  இடம் பெறும் பாதீட்டை தோற்கடிக்கும் முயற்சி என்பது மணிவண்ணன் தலமையில் மேற்கொள்ளும்  ஒவ்வொரு நிலைபேறான அபிவிருத்தியினால் தத்தமது கட்சிக்களுக்கும்  தமக்கான வாக்குகள் மணிவண்ணன் தரப்பிற்க்கு சென்றுவிடும் என்கின்ற ஒரே ஒரு அச்சமே!  இவர்கள் பாதீட்டை தோற்கடிப்பதற்க்கான காணமாக சிந்திப்பதை உணர முடிகிறது மட்டுமல்ல இது ஒரு அரசியல் காழ்ப்புமர்ச்சியும் கூட,

இதே வேளை அரசியல் கட்சிகள் பல்வேறு இறுதி நிலைப்பாடுகளை எடுத்திருப்பதாகவும் உத்தியோக பற்றற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை, மற்றும் சீ.வீ.கே. சிவஞானம் ஆகியொர் நேற்று இடம் பெற்ற கூட்டத்தில் பாதீட்டிற்க்கு எதிராக வாக்களிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும்,  இது வெறும் கட்சி அரசியல் அல்லது வாக்கு வங்கி அரசியல் நிலைப்பாட்டில் ஏடுக்கப்பட்ட தீர்மானம மட்டுமே என்றும் இதில் அதன் பேச்சாளர் மாநகர சபை பாதீட்டை தோற்கடிக்கப்பட்டு வேண்டும், அது மாவை சேனாதிராஜா, சீ.வீ.கே. சிவஞானம் போன்றோர் மூலமே இடம் பெறவேண்டும் என்றும் எதிர்பார்ப்பதாகவும், காரணம் பாதீடு தோற்கடிப்பால் மக்கள் மத்தியிலிருந்து எழக்கூடிய எதிர்ப்பு, அல்லது ஏற்படக் கூடிய விளைவுகளுக்கு அவர்கள் மீது பழியை போட்டுவிட்டு தான் தப்பித்துக் கொள்வதே அவரது நிலைப்பாடாகும்.

இதே வேளை ஈபிடீபியில் அதன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்று காலையே இறுதி முடிவை அறிவிப்பார் என்றும், ஏற்கனவே ஈபிடீபி உறுப்பினர்கள் இரண்டு தர்ப்பாக உள்ளனர் என்றும், சட்டத்தரணி றெமீடியஸ் தலமையில் ஒரு அணியும், முன்னாள் முதல்வர் தலமையில் இன்னோரணியும் வெவ்வேறு நிலைப்பாட்டில் உள்ளதாகவும்,  இதில் சட்டத்தரணி றெமீடியஸ் தலமையிலான அணி அவரது பணிகளை குழப்ப கூடாது மேலும் சந்தர்பப வழங்க வேண்டும் என்றும்,  இதனால் மணிவண்ணனுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும்,  இதே வேளை முன்னாள் முதல்வர் தலமையிலான அணி மணிவண்ணனை இப்படியே விட்டுவிட்டால் தமக்கான வாக்கு வங்கி உடைந்து அரசியல் எதிர்காலம் இல்லாமல் போய்விடும் என்றும் இதனால் எப்படியாவது மணிவண்ணனை தோற்கடித்துவிடவேண்டும் என்ற நிலையிலேயே உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகில இலங்கை தமிழ் காங்கிரசில் கஜேந்திரகுமார் வசம்  மூன்று உறுப்பினர்களே உள்ளனர். கஜேந்திரா தரப்பு தனக்கான எதிரியாக இருக்கக்கூடிய மணிவண்ணனை துரோகிகளுடன்  கூட்டுச் சேர்ந்தாவது அரசியல் அரங்கிலிருந்து அகற்றி விட வேண்டும் என்கின்ற நிலையில் உள்ளதாக அறிய முடிகிறது. உதிரி கட்சிகள் நிலைப்பாடுகளை அறிய முடியவில்லை,

மத்திய அரசாங்கம் முதல்வரை அகற்றவேண்டும் எனும் நிலைப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தாவின் தீர்மானம் அரசுக்கு எதிராகவோ மணிவண்ணனுக்கு ஆதரவாகவோ இருக்க வாய்ப்பில்லை.

45 பேரை கொண்ட யாழ் மாநகர சபையில் யாருக்கும் அறுதி பெரும்பாண்மை இல்லை, கூட்டாட்சியே அவர்கள் முன்  உள்ள தெரிவாகும், யாரை அரங்கிலிருந்து அகற்றினாகும், மீண்டும் முதல்வராக வருபவர் தோற்கடிக்கப்படக் கூடிய நிலையே தோன்றும்.

இந்நிலையில் இன்று ஒரு பரபரப்பான சூழல் காணப்படுகிறது. அரசியல், கட்சி, நலன் சார்ந்து அறத்தின் பால் செயற்பட வேண்டும் என்று புத்திஜீவிகள் பகிரங்கமாக அனைத்து கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்திருக்கும்  நிலையில் இன்று  எதிர்பார்ப்புக்கள் நிறைந்ததாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே வவுனியா வடக்கு பிரதேச சபை பாதீடு தோற்கடிக்கப்பட்டு அது அது பெரும்பான்மையினரிடம் செல்லவுள்ள அபாயமும் யாழ் மாநகர சபை ஆணையாளர் வசம் செல்லும் அபாயமும், உள்ள நிலையில் அரசியல்வாதிகள் தமிழ் இனத்தின் இருப்பு, எதிர்காலம் நிலைபேறான அபி்விருத்தி நிலையிலிருந்து பாதீடு மீதான வாக்களிப்பில் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பதே மக்களது எதிர்பார்பாகும்.

Recommended For You

About the Author: Editor Elukainews