அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல்.

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நிந்தவூர் பிரதேச செயலகம் இணைந்து நாடாத்தும் தெய்வீக சிறுவர் திட்டத்தின் அறநெறிப்பாடசாலை பின்தங்கிய மாணவர்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டன.

அறநெறிப்பாடசாலை மாணவர்கள் கற்றல் செயற்பாட்டினை முன்னெடுக்கும் வகையில் கற்றல் உபகரணங்களான புத்தகப்பை அப்பியாசகொப்பிகள் வழங்கும் நிகழ்வு நேற்று அட்டப்பள்ளம் சித்தி விநாயகர் அறநெறிப்பாடசாலயில் இடம் பெற்றது.

இதன்போது அட்டப்பள்ளம் சித்தி விநாயகர் அறநெறிப்பாடசாலை மாணவர்களால் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்காக வெளியிடப்பட்ட பாட நூல்கள் கண்காட்சி போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.

Recommended For You

About the Author: admin