கவிஞர் ஐயாத்துரை பிரபு எழுதிய அரிமா நோக்கு மற்றும் மகரந்தத் தூறல் எனும் இரண்டு கவிதை நூல்கள் வெளியீடு.

(மருதங்கேணி நிருபர்)
கவிஞர் ஐயாத்துரை பிரபு எழுதிய அரிமா நோக்கு மற்றும் மகரந்தத் தூறல் எனும் இரண்டு கவிதை நூல்கள் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளன.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 10:30 மணிக்கு   பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி தலமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில்
மங்கல  விளக்கினை பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி,உதவி பிரதேச செயலர் பசுபதி தயானந்தன்,நிருவாக கிராம அலுவலர் திரு தவராசா,பிரதேச கலாசார பேரவை தலைவரும், கலாசார உத்தியோகத்தருமான பெ.செல்வசுகுணா, நூலாசிரியரின் பெற்றோரான திரு திருமதி ஐயாத்துரை தம்பதியினர் உட்பட பலரும் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து வரவேற்புரையினை பிரதேச செயலக நிர்வாக கிராம அலுவலர் திரு  தவராசா
 நிகழ்த்தியதை தொடர்ந்து
வெளியீட்டுரையினை வடமராட்சி கிழக்கு உதவி பிரதேச செயலர் பசுபதி தயானந்தன் வழங்கினார்.
தொடர்ந்து அரிமா நோக்கு எனும் நூலினை பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி வெளியீட்டு வைக்க அதற்க்கான முதற் பிரதியினை திரு திருமதி தயாளன் மாதங்கி ஆகியோர்  பெற்றுக் கொண்டனர்.
மகரந்த தூறல் எனும் நூலினை உதவி பிரதேச செயலர் பசுபதி தயானந்தன் வெளியிட்டு வைக்க முதற் பிரதியினை இராமலிங்கம் சிற்றம்பல்ம் பெற்றுக் கொண்டதை தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து அரிமா நோக்கு எனும் நூலின் மதிப்பீட்டு உரையினை ஓய்வு நிலை ஆசிரிய கல்வியியலாளரான க.தர்மராசா, மகரந்த தூறல் நூலுக்கான மதிப்பீட்டு உரையினை கவிஞர் த.யாசகன், ஆகியோர் நிகழ்த்தினர்.
தொடர்ந்து எழுத்தாளரும் கவிஞருமான முல்லைத்தீவன் வாள்துரை நிகழ்த்தினார்.அதனை தொடர்ந்து நூலாசிரியர் ஏற்புரை இடம் பெற்றது.
இந்நிகழ்வில் கவிஞர்கள், கலைஞர்கள், நலன்விரும்பிகள், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews