தகவலறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு 5 உறுப்பினர்கள் நியமிப்பு!

தகவலறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு, ஜனாதிபதியினால், 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலறியும் உரிமை தொடர்பான சட்டத்தின் முதலாம் சரத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி இரத்நாயக்க, ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
5 உறுப்பினர்கள் கொண்ட ஆணைக்குழுவின் தலைவராக, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
தகவலறியும் உரிமை ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, ஜகத் பண்டார லியன ஆராச்சி, கிஷாலி பின்டோ ஜயவர்தன, ஓய்வு பெற்ற நீதிபதி ரோஹிணி வல்கம மற்றும் கலாநிதி அதுலசிறி குமார சமரகோன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews