ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு சரத் பொன்சேகா கடும் எச்சரிக்கை.

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுகளை பகிஷ்கரித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றிருந்த ஊடகங்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாம் நாடாளுமன்றிற்குள் செல்லாதிருப்பது இந்த குண்டர்களுக்கு அஞ்சியல்ல. ஒழுக்கமான சமூகத்திற்கான பிரதிநிதிகள் என்பதனாலேயேயாகும். சமூகத்தை மதிக்கும் காரணத்தினால் இந்த மோதல்களிலிருந்து விலகியிருக்க முயற்சிக்கின்றோம்.

எனினும் அது எங்கள் பலவீனமாக எவரும் கருதிவிடக் கூடாது. நாடாளுமன்றிற்குள் இருக்கும் குண்டர் கூட்டம் இளைஞர்களா வயோதிபர்களா என்பது பற்றி கவலையில்லை. கை கால்களை வீசினால் அதற்கு அஞ்சி அடிவாங்கிக் கொண்டு ஓட மாட்டோம் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews