முருகேசு சந்திரகுமார் மற்றும் சம்பிக்க ரணவக்கவிற்கும் இடையில் சந்திப்பு – ஊடகங்களிற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் மற்றும் சம்பிக்க ரணவக்கவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலிற்கு ஊடகங்களிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இன்று பகல் 12 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் இடம்பெற்றது. இதன்போது குறித்த கலந்துரையாடல் தொடர்பில் செய்தி அறிக்கையிடுவதற்கு ஊடகங்களிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

குறித் விருந்தகத்திற்கு வருகை தந்திருந்த முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்கவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரு;ம,சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான முருகேசு சந்திரகுமார் வரவேற்றதுடன், கரைச்சி பிரதேச சபையில் சுயேட்சைக்கூழு ஊடாக தெரிவாக பிரதேச சபை உறுப்பினர்களும், சுயேட்சைக்குழு தலைவர் மனோகரன் ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து விருந்தக மண்டபத்தில் விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயினும் ஊடகங்களிற்கு செய்தி சேகரிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Recommended For You

About the Author: Editor Elukainews