முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க இன்று கிளிநொச்சி விஜயம்…!

முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தார். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் அமைந்துள்ள பொது நோக்கு மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து அழைக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றில் அவர் ஈடுப்பட்டார்.

இதன்போது மக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் குறிப்பாக பசளை, வீடு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் அவரிடம் கருத்து முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த அவர், குறித்த பிரச்சினைகள் தொட்பில் எழுத்து மூலமாக தருமாறும், அதற்கு பொருத்தமானவர்களிற்கு தகவலை வழங்கி தீர்வு பெற்று தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews