நாடு முழுவதும் அடுத்த 2 நாட்களுக்கு இடைக்கிடை மின்வெட்டு அமுலாகும்! இ.மி.சபை .. |

நாடு முழுவதும் நேற்றய தினம் பல மணிநேரம் மின்வெட்டு அமுலான நிலையில் நுரைச்சோலை மின் நிலையத்தின் பணிகள் வழமைக்கு திரும்புவதற்கு குறைந்தது 2 நாட்களாவது எடுக்கும் என இலங்கை மின்சாரசபை தொிவித்துள்ளது. 

இதனால் நாட்டில் 2 நாட்களுக்கு இடைக்கிடையில் மின்விநியோகத் தடை ஏற்படக்கூடும் எனவும் இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மின்சார சபை இதனைத் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews