புகையிரதம் வடி ரக வாகனம் விபத்து ஒருவர் பலி…..!

(கொடிகாமம் நிருபர்)

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்துடன் வட்டா வடி ரக வாகனம் மோதி சற்றுமுன்னர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

குறித்த விபத்தில் தவசிகுளம் கொடிகாமம் தவசிகுளம்  பகுதியை சேர்ந்த 32 வயதுடைய  சூசைநாதன் பிரதீபன் என்பவரே மரணமடைந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
மஞ்சள் நிற சமிக்கை விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்த போது குறித்த வட்டா வடி ரக வாகனம் கடவையை கடக்க முற்பட்ட போதே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
விபத்தில் பததுகாயமடைந்தவரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை அவர் மரணம் அடைந்துள்ள நிலையில் சடலம் சாவகச்சேரி ஆதார் வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews