வீடுகளுக்குச் செல்லும் ஜனாதிபதி விசாரணைக் குழு!

சமையல் எரிவாயு கொள்கலனுடன் தொடர்புடைய வெடிப்பு மற்றும் தீப்பரவல் சம்பவங்கள் தொடர்பில் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழு இன்று வீடுகளுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்கிறது.
இந்நிலையில், சமையல் எரிவாயுடன் தொடர்புடைய அனர்த்தங்கள் இடம்பெற்ற கொட்டாவ, அத்துருகிரிய ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று குறித்த குழுவின் உறுப்பினர்கள் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.
இதேவேளை, சமையல் எரிவாயு கொள்கலனுடன் தொடர்புடைய மேலும் 35 சம்பவங்கள் நேற்றைய தினம் பதிவானதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews