இந்திய அரசிடம் 400 மில்லியன் ரூபா நிதி கோரிய யாழ் மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள்!

யாழ் மாவட்ட மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கும் யாழ் இந்திய துணைத்தூதுவருக்கும் இடையில் இன்றைய தினம் விசேட சந்திப்பு இடம்பெற்றது

குறித்த சந்திப்பின் போது யாழ்ப்பாண மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகளினால் யாழ் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்திய அரசிடம் 400 மில்லியன் ரூபா நிதி உதவி கோரப்பட்டுள்ளது. இன்றைய சந்திப்பு தொடர்பில் தொடர்பில் கருத்துரைத்த யாழ்ப்பாண மாவட்ட மீனவ சங்க பிரதிநிதி அன்ன ராசா மேற்கண்டவாறு தெரிவித்தார்

நீண்ட காலமாக 2500 இந்திய மீனவர்களுக்கும் வடக்கு  மீனவர்களுக்கும் உள்ள பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு இன்றைய சந்திப்பில் கோரிக்கை விடுத்துள்ளோம்.  இந்தியாவுக்கோஅல்லது தமிழ்நாட்டுக்கோ எதிரான பிரச்சினையாக இதனை கருதாது பல கோடி ரூபாய் சொத்துகளை வடபகுதி மீனவர்கள் இழந்துள்ளோம்.

எமது கடற்தொழில் அமைச்சு 500 கோடி ரூபாய்க்கு மேல் இந்திய அரசாங்கத்திடம் நஷ்ட ஈடு கோரியுள்ளது
இருந்தபோதிலும் யாழ் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கங்கள், சமாசங்கள், சம்மேளனங்களினை  பொறுத்தவரை எங்களுக்கு குறிப்பிட்ட தொகையை அண்ணளவாக 400 மில்லியன் ரூபாவை எங்களுடைய கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்காக வழங்குமாறும் அதற்குரிய திட்டம் ஒன்றினை தயாரித்து கடந்த வாரம் கடற்றொழில் அமைச்சின் சந்தித்து  கையளித்திருக்கின்றோம்

அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் இந்திய துணை தூதுவரிடமும் கையளித்துள்ளோம்
எங்களுடைய மீனவர்களுடைய வாழ்வாதாரத்தை அதிகரிக்க   இந்த 400 மில்லியன்  ரூபா உதவியினை தொழிலாளர்களுக்கு மானியமாகவும் சுழற்சி முறையில்  வலைகளாக வழங்குவதற்காக கோரி நிற்கின்றோம்
அந்த கோரிக்கையினை தாம்  பரிசீலிப்பதாக யாழ்  இந்திய துணை தூதுவர் தெரிவித்திருந்தார்.

அத்தோடு இலங்கையில் உள்ள இந்திய துணைத் தூதரகர் மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுடன்  இந்திய இலங்கை மீனவர்கள் தொடர்பான பிரச்சினையை பேசி இருக்கின்றார் அதனை  நாங்கள் வரவேற்கின்றோம் என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews