கிளிநொச்சியில் உள்ள குளங்கள் வான் பாய்கின்றன!

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 9 பாரிய மற்றும் நடுத்தர குளங்களில் அக்கராயன் குளம் தவிர்ந்த ஏனைய குளங்கள் அனைத்தும் அதன் நீர் கொள்ளளவு அடைவு மட்டத்தை அடைந்து வான் பாய்கின்றன.

25 அடி நீர்க் கொள்ளளவு கொண்ட அக்கராயன் குளத்தின் நீர்மட்டம் 24 அடி 5 அங்குலம் ஆக உயர்வடைந்துள்ளது.

அக்கராயன் பிரதேசத்தில் 38.9 மில்லி மீற்றர் மழையும், நாகபடுவான் பிரதேசத்தில் 34.2 மில்லி மீற்றர் மழையும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews