குடியரசுத் தலைவர் செயலணியுடன் சைவர்கள் சந்திப்பு.

ஒரே நாடு ஒரே சட்டம் எனும் ஜனாதிபதி செயலணியை நேற்று சந்தித்துள்ளதாக கலாநிதி சிவசேனை தலைவர் மறவன்புலவு க சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகத்தனருக்கு அனுப்பிய செய்திக் குறிப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் அனுப்பிய செய்திக் குறிப்பு வருமாறு.

இலங்கை குடியரசுத் தலைவரின் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி தலைவர் வணக்கத்துக்குரிய ஞானசார தேரர்
தமிழ் உறுப்பினர்கள் திருமதி பற்குணராசா, திரு தயானந்தராசா,குடியரசுத் தலைவரின் செயலாளர், அலுவலக மூத்த அலுவலரான பெண்மணி மற்றும் ஐந்து அல்லது ஆறு உதவியாளர்கள்

21 11 2021 ஞாயிற்றுக்கிழமை
காலை 10:00 மணி தொடக்கம் 12:00 மணிவரையும்
பின்பு 13:00 மணி தொடக்கம் 16:30 மணி வரையும்

யாழ்ப்பாணம் தொடர்வண்டி நிலையத்துக்கு அருகே உள்ள வலம்புரி சொகுசு விடுதியின் மூன்றாம் மாடியில் உள்ள அரங்கில்

அம்பாறை மட்டக்களப்பு வவுனியா மன்னார் யாழ்ப்பாண மாவட்டங்கள் சார்ந்த சைவ சமய அமைப்புகளின் தலைவர்கள் தோராயமாக 25 பேர்

குடியரசுத் தலைவரின் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியைச் சந்தித்தனர்.

புத்தபிக்குகள், மதமாற்றும் செபக் கூட்டத்தினர், முகமதியர் மதநல்லிணக்க அவையினர் என மேலும் 9 அல்லது 10 பேர் அங்கிருந்தனர்.

சைவ சமய அமைப்பின் தலைவர்கள் பின்வரும் நான்கு சட்டங்களை உடன் நிறைவேற்றக் கோரினர். அச் சட்டங்களின் தேவை தொடர்பாக வட மாகாணத்தின் கிழக்கு மாகாணத்தின் கள நிலைகளை எடுத்துக் கூறினர்.

1 அரசியலமைப்பில் புத்த சமயத்திற்கு முன்பே இலங்கையில் இருந்து வந்த சைவ சமயத்திற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

2 மதமாற்றத் தடைச் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்.

3 மாடுகள் கொலைத் தடைச் சட்டத்தை உடன் நிறைவேற்ற வேண்டும்.

4 திருக்கோயில்களில் உயிர்ப்பலித் தடைச் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்.

சைவர்களைச் சந்திப்பதற்காக அடுத்த மாத நடுப்பகுதியில் குடியரசுத் தலைவரின் செயலணி வடக்கே மீண்டும் வரும் எனத் தலைவர் கூறினார்.

Recommended For You

About the Author: Editor Elukainews