தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் உயிரிழப்பு.

மட்டக்களப்பு – மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ம.இளங்கோ இன்று அதிகாலை காலமானார்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் குறுமண்வெளி வட்டார உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட இவர் நீண்டகாலமாகத் தமிழ்த் தேசியத்தின் பால் பயணித்த ஒருவராயிருந்தார்.

பல்வேறு அச்சுறுத்தலான காலப்பகுதியிலும் தமிழ்த் தேசிய தடம்மாறாமல் பயணித்த இவர் இன்று அதிகாலை நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவரது மரணத்திற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் தனது அனுதாப செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மன்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் குறுமண்வெளி வட்டார உறுப்பினரும், தடம் மாறா தமிழ்த் தேசிய பற்றாளரும், சிறந்த மனித நேய செயற்பாட்டாளருமான இளங்கோ அண்ணன் இறைபதம் அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

வெளியூரில் உள்ள காரணத்தினால் அன்னாரின் இறுதி கிரியைகளில் கலந்து கொள்ள முடியாததை எண்ணி மிகவும் மனம் வருந்துகின்றேன். அவரின் ஆத்ம சாந்தியடைய அனைவரும் இறைவனைப் பிராத்திப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews