பன்னிரண்டு முக்கியஸ்தர்களுக்கு முல்லை நீதிமன்றம் தடை….!

மாவீரர் நாள் நினைவேந்தல் நடாத்துவதற்கு 12 பேருக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருக்கின்றது. 

வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர், துரைராசா ரவிகரன் உள்ளிட்ட பன்னிரெண்டு பேருக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிக்குள் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை செய்யக்கோரி,

முல்லைத்தீவு பொலிஸார் 17.11.2021 நேற்று மாங்குளம் நீதிமன்றில் ஏ.ஆர்868/21 என்னும் வழக்கிலக்கத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

அதற்மைய வழக்கினை அராய்ந்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா, முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில்

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட பன்னிரெண்டு பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

அந்தவகையில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழரசு கட்சியைச் சேர்ந்த அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இழஞ்செழியன்,

மூக செயற்பாட்டாளர் முத்துராசா சிவநேசராசா(கரன்), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன்,

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன்(முல்லை ஈசன்),

சமூக செயற்பாட்டாளர் இசிதோர் அன்ரன் ஜீவராசா, முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி ,

சமூக செயற்பாட்டாளர் பேதுருப்பிள்ளை ஜெராட் , முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம்,

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சமூக செயற்பாட்டாளர் கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்னேஸ்வரன் ஆகிய பன்னிரெண்டு பேர் 

மற்றும் இவர்களது குழுவினர்களுக்கே இந்த தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews