கருங்கல்லால் வீதி அமைத்து கள்ள மண் திருட்டு….

தொடர்ச்சியாக நாகர்கோவில் பகுதிகளில் சட்டவிரோதமான மணல் அகழ்வு இடம் பெற்று வருவதாக பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆ.சுரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

 நாகர்கோவில் மேற்கு, நாகர்கோவில் கிழக்கு,நாகர்கோவில்   வடக்கு, குடாரப்பு பகுதிகளில் கும்பல் ஒன்றினால் மணல் கொள்ளை திட்டமிடப்பட்டு  மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குறித்த பகுதிகளில் ஒரு அணி  உழவு இயந்திரத்தில் ஏற்றி வநது வீதிகளில் மணலை கொட்டுவதாகவும், மற்றவர்கள் கனரக வாகனத்தை  கொண்டு வந்து அள்ளிச் செல்வதாகவும், குறிப்பிட்டதுடன்
பல்வேறு இடங்களிலும் இந்த மணல் ஏற்றப்படுகிறது.
இது ஒரு பாரிய திட்டமிடப்பட்ட செயல் என்றும்
 இதனை தடுத்து நிறுத்துவதற்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு உட்பட பலரிடமும்   தொடர்ச்சியாக முறையிட்டும் எந்தவிதமான. பலனும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்ததுடன்  3 , 4 வருடங்களிற்க்கு மேலாக திருட்டு மணல் அகழ்வு அதிகரித்திருப்பதாகவும், தெரிவித்ததுடன்  உடையவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews