எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை, யாழ் மாவட்ட செயலர்….!

யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் குவிந்துவரும் நிலையில் அவ்வாறான தேவை இல்லை. எனவும், போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

மாவட்டத்தில் சகல பாகங்களிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருப்பதுடன், பலர் சிறிய கொள்கலன்களில் எரிபொருளை வாங்கி செல்வதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

இந்நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் குவியும் அவசியம் இல்லை. என கூறியிருக்கும் யாழ்.மாவட்டச் செயலர், நாட்டின் மொத்த பயன்பாட்டில் 20 சதவீதமான எரிபொருள் மட்டுமே சபுஸ்கந்தவிலிருந்து பெறப்படகின்றது.

ஆகவே தட்டுப்பாடு உருவாகும் அபாயம் இல்லை. மேலும் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது. எனவும் அவர் கூறியிருக்கின்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews