பெரமுன, சுதந்திர கட்சி,முன்னணி, தமிழர் விடுதலை கூட்டணியோடும் கூட்டுச்சேர்ந்த இலங்கை தமிழரசு கட்சி….!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட பருத்தித்துறை பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நேற்று  நிறைவேற்றப்பட்டுள்ளது.

சபையின் விசேட கூட்டம் நேற்று  காலை சபையின் தவிசாளர் சாள்ஸ்.அரியகுமார் தலைமையில் இடம் பெற்றது.

வரவு – செலவுத் திட்டத்தை வாக்கெடுப்புக்கு விட்டபோது 16 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 4 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் 2 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஓர் உறுப்பினரும் (கா.அரசரட்னம்), ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஓர் உறுப்பினரும் (பொ.பிரேமதாஸ்) வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஈ .பி.டி.பியின் சார்பில் கலந்து கொண்ட ஒரேயோரு உறுப்பினர் (செ.செபஸ்தியன்) மாத்திரம் எதிராக வாக்களித்தார். 21 உறுப்பினர்களைக் கொண்ட பருத்தித்துறை பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக்கூட்டணி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகள் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவை வழங்கியுள்ளன.

எஞ்சிய ஈ.பி.டி.பியின் 2 உறுப்பினர்களும் (செல்வி. த.சாந்தாதேவி, திருமதி. ப.கலாவதி), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஓர் உறுப்பினரும் (நா.பாலரமேஸ்), ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரேயொரு உறுப்பினரும் (இ.நாகேந்திரராசா) கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை

Recommended For You

About the Author: Editor Elukainews