பூநகரி கோட்டையை பாதுகாப்பதுடன், அதனை அண்மித்து பொழுதுபோக்கு பூங்கா ஒன்றை அமைப்பது தொடர்பில் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைச்சர் சம்மதம்.

பூநகரி கோட்டையை பாதுகாப்பதுடன், அதனை அண்மித்து பொழுதுபோக்கு பூங்கா ஒன்றை அமைப்பது தொடர்பில் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைச்சர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சிக்கு கடந்த 4ம் திகதி விஜயம் மேற்கொண்டிருந்த தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மண்ணித்தலையில் அமைந்துள்ள சோழர்காலத்து சிவனாலயத்தினை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்திருந்தார்.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் அன்றைய தினம் பூநகரி பிரதேச சபை உறுப்பினர் குலராசசிங்கம் புவியரசன் முன்வைத்த கோரிக்கைக்கு சம்மதம் தெரிவித்தார்.
பூநகரி வாடியடி பகுதியில் அமைந்துள்ள கோட்டையை பாதுகாப்பதுடன், அதன் தொன்மையையும் பாதுகாத்து, அப்பகுதியை அண்மித்து சிறுவர் பூங்கா ஒன்றை அமைப்பதற்கு அனுமதிக்குமாறு குறித்த பிரதேச சபை உறுப்பினரும், பூநகரி பிரதேச செயலாளரும் அமைச்சரிடம் வேண்டுகை ஒன்றை முன்வைத்தனர்.
குறித்த பூங்கா அமைப்பதற்கு உரிய முறையில் திட்டத்தினை தொல்பொருள் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறும், அதற்கான அனுமதியை வழங்குவது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் இதன்புாது குறிப்பிட்டிருந்தார்.
குறித்த கலந்துரையாடலின்போது நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும், யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணை தலைவருமான அங்கயன் இராமநாதன், அமைச்சின் செயலாளர் நிசாந்தி ஜெயசிங்க, திணைக்கள பொது முகாமையாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
குறிதத் தொன்மை மிக்க கோட்டையினை பாதுகாப்பதுடன், அப்பகுதயில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு, நடை பயிற்சிக்கான அமைவிடமும் அமைக்கப்படுமிடத்து சுற்றுலா பிரயாணிகளை கவரும் வகையில் அப்பகுதி உருவாக்கப்படும் என பிரதேச வாழ் புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews