யாழ்.பருத்தித்துறையில் சிறுமி மீது பலாத்காரம்! பேருந்து நிலையத்தில் தனியே நின்ற சிறுமியிடம் நடந்த விசாரணையில் அம்பலம், இருவர் கைது.. |

வீடொன்றுக்கு அழைத்துச் சென்று 15 வயதான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் பருத்தித்துறை பொலிஸாரினால் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் நேற்று(வியாழக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் தனித்து நின்ற 15 வயதுச் சிறுமியை பொலிஸ் காவலில் எடுத்துப் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறை கற்கோவளம் பகுதியிலுள்ள வீடொன்றுக்கு

நேற்றுமுன்தினம் இரவு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, இருவேறு நேரங்களில் 2 இளைஞர்களினால் வன்புணர்வுக்கு உள்படுத்தப்படிருக்கலாம் என  பொலிஸார் குறிப்பிட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கைக்காக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 19 மற்றும் 24 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews