யாழ். வடமராட்சியில் மரக்கன்றுகள் விநியோகம்!

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம், வடக்கு மாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு, பொது அமைப்புகளின் மூலம் மர நடுகையை ஊக்குவித்து வருகிறது.
அந்தவகையில், வடமராட்சி அல்வாயிலுள்ள பொது அமைப்புகளின் வேண்டுகோள்களுக்கு இணங்க, அவ்வமைப்புகளின் பிரதிநிதிகளிடம், நேற்று. மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், மரக்கன்றுகளை வழங்கி வைத்து, அப்பகுதிகளில் மர நடுகையையும் ஆரம்பித்து வைத்தார்.
வடக்கு மாகாண சபை, கார்த்திகை மாதத்தை, 2014 ஆம் ஆண்டு, வடக்கு மாகாண மர நடுகை மாதமாக பிரகடனப்படுத்தியது.
அதையடுத்து, ஆண்டு தோறும், கார்த்திகை மாதத்தில், தமிழ் மக்கள், மர நடுகையை உணர்வுபூர்வமாக மேற்கொண்டு வருகின்றனர் என, தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews