முக்கியஸ்தரின் மரணச்சடங்கில் கலந்துகொண்ட மூன்று அமெரிக்க ஜனாதிபதிகள்!

அமெரிக்க முன்னாள் உள்துறை செயலாளர் கொலின் பவலின் மரணச் சடங்கில் அமெரிக்க தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், முன்நாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மரணச்சடங்கு நேற்று நடைபெற்றது.
இந்நிலையில், ஒரு சம்பிரதாய அடிப்படையில் அல்லது, மனிதாபிமான அடிப்படையில் கூட, முன்னாள் ஜானாதிபதி டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு முன்னாள் ஜனாதிபதி பில் கிளிங்ரன் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரது மனைவி ஹெலரி கிளிங்ரன் பவலின் மரணச்சடங்கில் கலந்துகொண்டார்.
பென்டகன் பாதுகாப்பு நிலையத்திற்கு சொந்தமான வளாகம் ஒன்றில் இடம்பெற்ற இறுதிக் கிரிஜையில், சுமார் 5 அடுக்கு பாதுகாப்பு அங்கே போடப்பட்டு மிக மிக முக்கியமான நபர்கள் மட்டுமே அங்கே செல்ல அனுமதிக்கப்படிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews