முக அடையாளம் காணும் சேவையை கைவிடும் பேஸ்புக் நிறுவனம்.

முக அடையாளம் காணும் சேவையை கைவிடுவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
பேஸ்புக் தனது தாய் நிறுவனத்தின் பெயரை மெட்டா என கடந்த வாரம் மாற்றியது. இந்நிலையிலேயே பேஸ்புக் நிறுவனம் வழங்கி வந்த முக அடையாளம் காணும் சேவையை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பான வழிகாட்டுதல்களை பல நாடுகள் வெளியிடாத நிலையில் அதை கைவிடுவதாகவும் 100 கோடி பேரின் முக அடையாளங்களை நீக்குவதாகவும் தெரிவித்துள்ளது.
பேஸ்புக்கின் கீழ் பல நிறுவனங்கள் ஏற்கெனவே இருக்கின்றன. இன்னும் பல நிறுவனங்கள் அதன் கீழ் வரவிருக்கின்றன. அப்படி இருக்கும்போது அது பேஸ்புக்காக, சமூக வலைதள நிறுவனமாக மட்டுமே அறியப்படுவது சரியல்ல என்று இந்தப் புதிய பெயரை வைத்துள்ளார் மார்க். சமூக வலைதள விஷயங்களில் ஏற்படும் சர்ச்சைகள் மொத்த நிறுவனத்தையும் பாதிக்கக்கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறார் மார்க். இந்த மெட்டா என்னும் பெயர் அவரது கனவுத்திட்டமான மெட்டாவெர்ஸிலிருந்து ( Metaverse) வந்தது. கடந்த சில வருடங்களாகவே மெட்டாவெர்ஸ் உருவாகும் முயற்சியில் பேஸ்புக் அதீத ஈடுபாடு காட்டி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews