நல்லைக்குமரன் நூல் வெளியீட்டு நிகழ்வு ஆரம்பம்!

யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற சைவசமய விவகாரகுழுவினரால் வருடந்தோறும் வெளியிடப்பட்டு வரும் நல்லைக்குமரன் மலரின் 29 வது இதழ்  நூல்வெளியீடும்,சமய சமூக பணி ஆற்றி வரும் ஒருவருக்கு வருடம் தோறும் வழங்கப்படும் யாழ் விருது வழங்கும் நிகழ்வும் யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் ஆரம்பமாகி இடம்பெறுகின்றது.


யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் தலைமையில் இடம்பெறும் குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாநகர முதல்வரும்,சைவ சமய விவகார குழுவின் தலைவருமான வி.மணிவண்ணன் கலந்து கொண்டுள்ளதோடு சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண உள்ளூராட்சி  அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன்கலந்து கொண்டுள்ளார்.
மதத் தலைவர்களின் ஆசியுரையோடு ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் தலைமை உரை கௌரவிப்பு நூல்வெளியீடு என்பன இடம்பெறவுளளன

Recommended For You

About the Author: Editor Elukainews